எனை நோக்கி பாயும் தோட்டா படம் குறித்து மனம் திறந்த இயக்குனர் கவுதம் மேனன்
வேலுசாமி (Author) Published Date : Feb 08, 2018 10:57 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். முன்னதாக இந்த படத்திலிருந்து விசிறி, மறுவார்த்தை போன்ற பாடல்கள் வெளியானது. தற்போது இந்த படத்தின் புது ஸ்டில்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது.
முழுக்க காதல் கலந்த ஆக்சன் படமாக உருவாகியுள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாக உள்ளது. இந்த படம் குறித்து இயக்குனர் கவுதம் மேனன் கூறும்போது "இந்த படத்தில் காதல், அதனால் நடக்கும் சண்டைகள், நான்கு வருட காதல், பிறகு பிரிவு, மீண்டும் அந்த பெண்ணை தேடி போதல், தேடலில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படம். இந்த படத்தில் நடிகர் தனுஷ் மாறுபட்ட நடிப்பை தந்துள்ளார். எனக்கு கூட இந்த படம் புதுவிதமான படம் தான். இந்த படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். விசிறி, மறுவார்த்தை போன்ற பாடல்களை தொடர்ந்து 'ஒளி மழையிலே' என்ற பாடலை வெளியிட உள்ளோம்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் "இது பார்ட் 2 கான சீசன். 'என்னை அறிந்தால்' சத்யதேவ் கதாபத்திரத்தை வைத்து அடுத்தடுத்து நிறைய விஷயங்கள் பண்ணலாம். அதுக்கு மனதில் நிறைய ஸ்க்ரிப்ட்கள் மனசுல இருக்கு. 'காக்க காக்க' பார்ட் 2 பண்ணுங்கன்னு நிறைய பேர் கேக்குறாங்க. அப்படி பண்ணா சூர்யா ஆர்வமா இருப்பார்னு தோணுது. 'வேட்டையாடு விளையாடு' படத்தையும் பார்ட் 2 எடுக்கலாம். அதிலும் கமல் சார் பண்ணா ரொம்ப நல்லா இருக்கும். 'விண்ணைத்தாண்டி வருவாயா' போன்ற காதல் படங்களுக்கு தற்போதுள்ள நாயகர்களில் மிகவும் பொருத்தமாக இருப்பவர் 'விஜய் சேதுபதி'. அவர் அனைத்து ஸ்க்ரிப்ட்க்கும் பொருத்தமாக இருப்பார்.
நடிகர் அதர்வா, விக்ரம் சார் பையன் துருவ் விக்ரம் இவங்களோட படம் பண்ணனும்னு விருப்பம். சமீபத்தில் பார்த்ததில் எனக்கு மிகவும் பிடித்த படம் 'அருவி'. இந்த படத்தை எடுக்கும் போது படக்குழு அந்த பயணத்தில் வாழ்ந்திருக்காங்கனு தோணுது. இது போன்ற புது ஐடியாவை தயாரிப்பாளர் சப்போர்ட் பண்ணத பார்க்கும்போது நம்பிக்கை வருது. இதே போல் 'நரகாசூரன்' படமும் வழக்கமாக வரும் நடைமுறையில் இருக்காது. புது பார்ட்மெட்ல தெளிவா எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்த்தாலே உங்களுக்கு புரியும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.