Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கௌதம் மேனன் இயக்கவிருக்கும் VTV தொடர்ச்சியில் ஒன்றாக

gautham menon next film title ondraga

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களின் ஒருவரான கௌதம் வாசுதேவ் மேனன் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு அறியப்பெற்ற விளம்பரப் பட உருவாக்குநராக இருந்தார். இவர் முதல் முதலில் ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்து, 'மின்சார கனவு' படத்தில் பணியாற்றினார். மேலும் விளம்பர படங்கள் எடுப்பதற்காக இவர் உருவாக்கிய ஃபோட்டான் ஃபேக்டரி நிறுவனம், தற்போது திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. இவர் முதல் முதலாக மின்னலே படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

தற்பொழுது கௌதம் மேனன் இயக்கி வரும் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' மற்றும் தனுஷின் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' போன்ற இரண்டு படங்களுமே இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளது. இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் மற்றொரு புது படத்திற்கான தகவலை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 2010ம் ஆண்டில் இவரது இயக்கத்தில் வெளிவந்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தொடர்ச்சியாக உருவாக உள்ளது. இந்த படத்தில் சிம்பு கையாண்ட கார்த்திக் கதாபாத்திரம் 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்பொழுது என்ன செய்கிறார் என்பதை மையமாக கொண்டு உருவாகவிருக்கிறதாம். ஒன்றாக' என்ற தலைப்பினை வைத்துள்ள இப்படத்தில்  கார்த்திக் கதாபாத்திரத்துடன் மூன்று நெருங்கிய நண்பர்கள் கதையில் ஈடுபட இருக்கின்றனராம். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நான்கு முன்னணி நடிகர்கள் நடிக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

கௌதம் மேனன் இயக்கவிருக்கும் VTV தொடர்ச்சியில் ஒன்றாக