Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பிரியாவிடை கொடுத்த 'கோலிசோடா 2' படக்குழு

golisoda2 movie shooting

'பிரியமுடன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விஜய் மில்டன். அதன் பிறகு காதல், தீபாவளி, காதலில் விழுந்தேன், வழக்கு எண் : 18/9, கோலி சோடா, 10 எண்றதுக்குள்ள போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்ற 'கோலி சோடா' படத்தின் இரண்டாம் பாகத்தை தற்பொழுது இயக்கி வருகிறார்.       

இந்த படத்தின் முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். கூடைப்பந்து விளையாட்டின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் காவல் துறை அதிகாரியாக இயக்குனர் கெளதம் மேனன் களமிறங்கியுள்ளார். மேலும் விஜய் மில்டன் இயக்கி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் அவருக்கு சொந்தமான ‘ரஃப் நோட் புரொடக்ஷன்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படத்தினையும் தயாரித்துள்ளார்.மேலும் இப்படத்தில் அச்சு இசையமைக்க, தீபக் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார்.  

இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த படத்தின் ஆடியோ டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. அதனை அடுத்து படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அதிகளவு ஈடுபட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படத்தினை அனைத்து வித ஷூட்டிங்கும் வெற்றிகரமாக நிறைவு பெற்றிருப்பதாக படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் அவரது ட்விட்டர் மூலம் தகவலை வெளியிட்டுள்ளார்.               

பிரியாவிடை கொடுத்த 'கோலிசோடா 2' படக்குழு