ஜிவி பிரகாஷின் காதலை தேடி நித்யா நந்தா இறுதிகட்ட படப்பிடிப்பில்
ராசு (Author) Published Date : Sep 17, 2018 16:06 ISTபொழுதுபோக்கு
தமிழ் சினிமாவில் பிஸியான நடிகரும் ஒருவராக வளர்ந்துள்ள ஜிவி பிரகாஷ் நடிப்பில் 100% காதல், சர்வம் தாள மையம், அடங்காதே போன்ற பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் 'திரிஷா இல்லனா நயன்தாரா' படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
இதன்படி இந்த படத்திற்கு 'காதலை தேடி நித்யா நந்தா' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் நாயகியாக அமைரா தஸ்தூர் நடித்து வருகிறார். இவர் அனேகன் படத்தின் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தவர். இந்த படத்திற்கு பிறகு சந்தானத்துடன் இணைந்து 'ஓடி ஓடி உழைக்கணும்' படத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு ஜிவி பிரகாஷ் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் முன்னாள் ஹீரோயினான சோனியா அகர்வால் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படம் தமிழ் சினிமாவில் புதுவித முயற்சியாக 3D தொழில்நுட்பத்தில் உருவாக்கி வருகின்றனர். இந்த படத்தில் முதல் பாதியை வழக்கமான படமாகவும், மற்றொரு பாதி 3Dயிலும் உருவாகி வருகிறது. தற்போது 80சதவீத படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளனர்.