Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஜிவி பிரகாஷின் 100% காதல் படத்தின் கதை - வெளியீடு தேதி அறிவிப்பு

ஜிவி பிரகாஷின் 100% காதல் படத்தின் இசை மற்றும் வெளியீடு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் நடிப்பில் 10 படங்கள் உருவாகி வருகிறது. சமீபத்தில் இயக்குனர் வசந்த பாலன், ஜிவி பிரகாஷ் கூட்டணியில் உருவாகி வரும் புதுப்பட டைட்டில் வெளியானது. இதன் படி இந்த படத்திற்கு 'ஜெயில்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தவிர 'செம' படத்திற்கு பிறகு ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் '100% காதல்' படம் வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது.

ஜிவி பிரகாஷ் ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்துள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரைலரும் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இயக்குனர் எம்எம் சந்திரமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார். இந்த படம் குறித்து இயக்குனர் எம்எம் சந்திரமௌலி கூறுகையில் "ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவன், மாணவி, இரண்டு பேருக்கும் இடையில் நடக்கும் சண்டை, ஈகோ, காதல் போன்றவற்றை கலகலப்பாக, நகைச்சுவை கலந்து உருவாக்கியுள்ளோம்.

யார் முதல் மார்க் வாங்குவது போன்ற குறும்புத்தனமான சண்டைகள் இந்த படத்தில் சுவாரிஷ்யமாக இருக்கும். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் நாயகனாக மட்டுமல்லாமல், இசையமைப்பாளராகவும் சிறப்பாக பணிபுரிந்துள்ளார். இவருடைய இசையமைப்பில் உருவாகியுள்ள பாடல்களை ஏவிஎம் ஸ்டுடியோஸில் பிரமாண்ட செட்டை அமைத்து உருவாக்கியுள்ளோம். இந்த படம் தெலுங்கில் கடந்த 2011இல் வெளியான 100% லவ் படத்தின் ரீமேக்.

இந்த படத்தில் தமன்னா கதாபாத்திரத்தில் ஷாலினி பாண்டேவும், நாக சைதன்யா கதாபாத்திரத்தில் ஜிவி பிரகாஷும் நடித்துள்ளனர். இதில் ஷாலினி பாண்டே, தமன்னாவின் கதாபாத்திரத்திற்கு ஈடு தருவாரா என்ற சந்தேகம் முதலில் இருந்தது. ஆனால் அதில் துளி சந்தேகமும் இல்லாத அளவிற்கு சிறப்பான நடிப்பை ஷாலினி பாண்டே வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தின் இசை விரைவில் வெளியாகவுள்ளது. படத்தை வரும் செப்டம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஜிவி பிரகாஷின் 100% காதல் படத்தின் கதை - வெளியீடு தேதி அறிவிப்பு