Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட நாச்சியார் படத்தின் புதிய தகவல்

gv prakash tweet about natchiyaar movie

இயக்குனர் பாலா எழுத்து, தயாரிப்பு, இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி.பிரகாஷ் இணைந்து நடித்து வரும் படம் நாச்சியார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் போன்றவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்து. இந்த படத்தில் ஜோ காவல் துறை அதிகாரியாகவும், ஜிவி குப்பத்து நாயகனாகவும் நடித்துள்ளனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் நாயகனாக நடிக்கும் ஜிவி.பிரகாஷ் குமார் இளையராஜா இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த தகவலை சில நாட்களுக்கு முன்பு ஜிவி அவரது ட்விட்டரில் வெளியிட்டார். 

இந்நிலையில் ஜிவி.பிரகாஷ் குமார் நாச்சியார் படத்தின் முதல் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் ஜிவியின் கேரக்டர் பெயரையும் வெளியிட்டுள்ளார். மேலும் இயக்குனர் பாலா படங்கள் என்றாலே இயற்கையான வசனம் அதிகம் இடம் பெறுவது அனைவரும் தெரிந்தது. அதே போன்று இந்த படத்திலும் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் குமார் இது வரை பார்த்திராத புது வித கெட்டப்புடம் கூடிய வசனத்தில் நடித்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.            

ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட நாச்சியார் படத்தின் புதிய தகவல்