டிஆரின் குடிக்கு எதிரான ஏந்திரு அஞ்சலி ஏந்திரு பாடல் டீசரை வெளியிட்ட ஹிப் ஹாப் ஆதி
விக்னேஷ் (Author) Published Date : Sep 03, 2018 17:59 ISTபொழுதுபோக்கு
அனேகன், கவண், விவேகம் போன்ற பல படங்களுக்கு பாடல் வரிகளை அமைத்துள்ள எழுத்தாளர் கபிலன் வைரமுத்து தற்போது மதுப்பழக்கத்திற்கு எதிராக 'ஏந்திரு அஞ்சலி ஏந்திரு' என்ற ஆல்பம் பாடலை உருவாக்கியுள்ளார். இந்த பாடலை டி ராஜேந்தர், பாலமுரளி பாலு, வர்ஷா மற்றும் ஸ்ரீநிதி ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலுக்கு கஜினிகாந்த் படத்திற்கு இசையமைத்துள்ள பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார்.
இந்த பாடலின் டீசர் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி 'தெருவெல்லாம் சாராயம் திறந்து கிடக்கு ' என்ற தொடங்கும் இந்த பாடலின் டீசரை ஹிப் ஹாப் ஆதி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் டிஆர் 'வெள்ளைக்காரன் பிசினஸ் பேசுனதுக்காக குடிக்கிறான், இவன், தமிழன் குடிக்கிறதையே பிஸினஸா வச்சிருக்கான்' என்று ஒரு பன்ச்சை பேசியுள்ளார்.
டிஆர் சொல்றதும் கரெக்ட் தான், தெருவிற்கு தெரு ரேஷன் கடை இருக்கோ இல்லையோ, தெருவிற்கு தெரு டாஸ்மாக்கை அரசாங்கம் திறந்து வைத்துள்ளது. குடிமகன்களை ஏன் குடிக்கிறீர்கள் என்று கேட்டால்,..அரசாங்கமே விக்கிறது..நாங்க குடிக்கிறதில் என்ன தவறு என்று நம்மை தான் கேள்வி கேட்கின்றனர். எங்க போய் முடியப்போகுதோ..