Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விஜயுடன் இணைந்து ஏஆர் முருகதாஸின் சர்கார் படத்தில் நடித்துள்ள டோங்கிலி

ஏஆர் முருகதாஸின் சர்கார் படத்தில் 7ஆம் அறிவு டொங்கிலி நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சர்கார்'. துப்பாக்கி, கத்தி படங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணியில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக இணைந்து நடித்து வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்து வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் பிறந்த நாளில் படக்குழு வெளியிட்டது.

இசைப்புயலின் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, ராதா ரவி, பாலா கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் '7ஆம் அறிவு' படத்தின் மூலம் பிரபலமான வில்லன் டொங்கிலி (Johnny Trí Nguyễn) நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹாலிவுட் நடிகரான இவர் தமிழில் ஏஆர் முருகதாஸின் '7ஆம் அறிவு' மற்றும் அதர்வாவின் 'இரும்புக்குதிரை' போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதன் பிறகு மீண்டும் ஏஆர் முருகதாஸுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பினை பெற்றுள்ள இந்த படத்தில் டோங்கிலி இணைந்துள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள இந்த படத்தின் டப்பிங் இன்று துவங்கியுள்ளதாக படக்குழு புது போஸ்டருடன் தெரிவித்துள்ளது. 

விஜயுடன் இணைந்து ஏஆர் முருகதாஸின் சர்கார் படத்தில் நடித்துள்ள டோங்கிலி