Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பொள்ளாச்சியில் சாகசத்தை நிகழ்த்தும் 2.0 படக்குழு

2.0 movie balloon festival in pollachi

சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்க்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.  கடந்த சில மாதத்திற்கு முன்பு துபாயில் படத்தின் இசையை பிரமாண்டமான முறையில்  லைக்கா ப்ரொடெக்சன் வெளியிட்டது. அதிகமான பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள  இப்படத்தில் ஏஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.     

 படத்தின் எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்துவதற்காக பிரிஸ்டோலில்    ( கிளாஸ்டர்ஷயரில் உள்ள ஒரு நகரம் ) காற்றை அதிகளவு நிரப்பி மிக பெரியா பலூனில் படத்தின் பெயர், ரஜினி, அக்க்ஷய் குமார் புகைப்படங்களை அச்சடித்து வானில் பறக்கவிட்டனர். இது போன்று அமெரிக்காவிலும் செய்தனர். மேலும் இசை வெளியீட்டின் போது துபாய் நகரத்தின் மக்களை மெய் சிலிர்க்கும் வகையில் பறக்கும் சாகச வீரர்களை கொண்டு வானில் பறக்கவிட்டனர் இதற்கு அடுத்த படியாக சர்வ தேச பலூன் திருவிழாவை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10 முதல் 16ம் தேதி வரை பொள்ளாச்சி மாநகரத்தில் 2.0 படத்தின் சாகசத்தை வெளிப்படுத்த உள்ளனர்.          

 

பொள்ளாச்சியில் சாகசத்தை நிகழ்த்தும் 2.0 படக்குழு