Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நடிகர் விஷாலின் 'இரும்புத்திரை' இசை வெளியீடு தேதி

irumbu thirai movie audio launch in natchathira vizha january 6

புது முக இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் 'இரும்புத்திரை'. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை ஜியார்ஜ் சி வில்லியம்ஸ் மேற்கொண்டுள்ளார். இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் தயாரிக்கிறார். நேற்று இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீடு ஜனவரி 6-இல் மலேசியாவில் நடைபெறவுள்ள நட்சத்திரவிழாவில் நடைபெற உள்ளது. 

இந்த நட்சத்திர விழாவில் 300 கும் மேற்பட்ட திரைப்பட கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த படம் குறித்து இயக்குனர் மித்ரன் சமீபத்தில் "முதலில் இந்த கதையை விஷால் சாரிடம் சொல்லும்போது கதை பிடித்திருந்தால் வேறொருவரை வைத்து பண்ணலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் இந்த படத்தில் நானே நடிக்கிறேன், வில்லன் கதாபத்திரத்தில் நடிக்கிறேன் என்று சொன்னார். வில்லனாக வேண்டாம் கதாநாயகனாக நடியுங்கள் என்று நான் சொன்னேன். இவருக்காக இந்த படத்தில் சாதாரண நாயகன் கதாபாத்திரத்தை ராணுவ அதிகாரியாக மாற்றியுள்ளேன். இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரம் மிகவும் வலிமையாக உருவாக்கியுள்ளேன். 

மேலும் நடிகை சமந்தா கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. சாதாரண நாயகி போல் இருக்காது. இந்த படம் சமூக வலைத்தளத்தில் நடக்கும் அவலங்களை பற்றி பல விஷயங்களை பேசும் படமாக இருக்கும். இந்த படத்தில் இவர் நடிப்பது உறுதியான பின் புதியதாக மற்றவர்களை தேர்ந்தெடுக்கலாம் என்றேன். அவர்தான் இந்த படத்தை பெரிய படமாகி பண்ணலாம் என்றார். இந்த படத்திற்கு அவர் அளித்த ஊக்கம் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஓவர் படப்பிடிப்பின் போது நடிப்பையும், நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் பணிகளையும் ஒரே சமயத்தில் கையாள்வார். சாதாரண மனிதனால் எப்படி இத்தனை வேலைகளை செய்ய முடியும் என்று வியக்க வைப்பார். " என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷாலின் 'இரும்புத்திரை' இசை வெளியீடு தேதி