Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மெர்சல் படத்தை போன்று எதிர்ப்புகளால் வசூலை குவித்து வரும் இருட்டு அறையில் முரட்டு குத்து

எதிர்ப்பு என்ற பெயரில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு கண்டனம் தெரிவித்து வந்ததில் சும்மா இருந்த இளைஞர்களின் ஆர்வத்தையும் தூண்டி உள்ளனர்.

கடந்த ஆண்டு தீபாவளியில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் மாபெரும் வெற்றி அடைந்து வசூல் சாதனையையும் படைத்து வந்தது. இதற்கு காரணமாக படத்தில் க்ளைமேக்சில் விஜய் பேசிய தவறான ஜிஎஸ்டி வசனம். இந்த படம் வசூலை குவித்ததற்கு பாஜகவின் ஹச் ராஜா மற்றும் தமிழிசை ஆகியோர் முக்கிய காரணமாக இருந்தனர். இந்த படத்திற்கு எழுந்த பல எதிர்ப்புகளால் அப்படி என்ன தவறாக பேசிவிட்டார் என்று அனைவரும் இந்த படத்தை காண ஆர்வமுடன் கிளம்பினர். இதனால் தியேட்டர்களில் பொது மக்கள் கூட்டம் நிரம்ப வசூலை குவித்து வந்தது.

இந்த படத்தை போன்று தற்போது கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகியுள்ள 'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற படத்திற்கும் எதிர்ப்புகள் தற்போது சரமாரியாக கிளம்பியுள்ளது. தமிழ் சினிமாவை அசிங்க படுத்துவதாக பல்வேறு அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள், சமூக நல அமைப்பினர் இந்த படத்தை தடை செய்யக்கோரி எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். ஒரு அடல்ட் காமெடி படமான இந்த படத்தில் டபுள் மீனிங் வசனங்களும், கிளாமர் காட்சிகளும் அதிக அளவில் இடம் பெற்றுள்ளது.

இதனால் இந்த படத்திற்கு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வீட்டிற்கு திருப்பி அனுப்படுகின்றனர். இருந்தாலும் கடந்த 4ஆம் தேதி வெளியான இந்த படம் 5 நாட்களில் தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஹர ஹர மகாதேவிகி படத்திற்கு பிறகு இந்த படத்தையும் அடல்ட் காமெடி த்ரில்லர் படமாக உருவாக்கியுள்ளார்.

ஆனால் இந்த படம் தமிழ்நாடு பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்துவதாகவும், இது போன்ற படங்களால் மற்ற இயக்குனர்களும் இது போன்ற செயலில் இறங்கி விடுவார்கள் என்று ஒரு புறமும், ஆபாசங்கள் நிறைந்த இந்த உலகில் இது போன்ற படங்கள் அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. எந்த படத்தை பார்க்க வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட கருத்து. இது போன்ற எதிர்ப்புகளால் தான் மக்களுக்கு அப்படி என்ன இருக்கிறது என்ற ஆர்வம் அதிகமாகிறது.

இதனால் தான் தற்போது இந்த படம் வசூலை குவித்து வருகிறது. நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது இந்த படத்திற்கு நீங்கள் விளம்பரம் செய்வது போலாகும் என்று மற்றொரு சிலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். எது எப்படியோ எதிர்ப்புகள் வலுத்து வருவதால் ஏராளமான இளைஞர்களும், பொது மக்களும்  அப்படி என்ன இருக்கிறது என ஆர்வமுடன் காண கிளம்பியுள்ளனர். இதனால் வெளியான 5 நாட்களிலே இந்த படம் வசூலை குவித்து வருகிறது.

மெர்சல் படத்தை போன்று எதிர்ப்புகளால் வசூலை குவித்து வரும் இருட்டு அறையில் முரட்டு குத்து