Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஜெயம் ரவியின் அடங்கமறு பர்ஸ்ட் லுக் வெளியீடு தேதி அறிவிப்பு

டிக் டிக் டிக் படத்திற்கு பிறகு அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் அடங்கமறு என்ற படத்தில் ஆக்சன் நாயகனாக ஜெயம் ரவி நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வனமகன் படத்திற்கு பிறகு உருவாகியுள்ள படம் 'டிக் டிக் டிக்'. இந்தியாவின் முதல் விண்வெளி சார்ந்த படமான இந்த படத்தை நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் போன்ற படங்களை இயக்கிய சக்தி சவுந்தர் ராஜன் இயக்கியுள்ளார். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் இந்த படம் வரும் ஜூன் 22இல் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு பிறகு அடுத்ததாக அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

'அடங்கமறு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு தேதியை ரம்ஜான் நாளான இன்று ரம்ஜான் வாழ்த்துக்களுடன் படக்குழு தெரிவித்துள்ளது. இதன் படி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூன் 24ஆம் தேதியில் படக்குழு வெளியிட உள்ளது.

தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பும் விரைவில் நிறைவடைய உள்ளது. இந்த படத்திற்கு பிறகு ஜெயம் ரவி அடுத்ததாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் பிரமாண்ட சரித்திர படமான 'சங்கமித்ரா' படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் ஆர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 

ஜெயம் ரவியின் அடங்கமறு பர்ஸ்ட் லுக் வெளியீடு தேதி அறிவிப்பு