Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஜெயம் ரவி வெளியிடும் பாண் பனாரஸ் லிரிக்கல் வீடியோ

prema baraha movie paan panaras lyrical video release

'பட்டத்து யானை' படத்தின் மூலம் ஆக்சன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து நடிகர் அர்ஜுன் தற்பொழுது தயாரித்து இயக்கிவரும் 'சொல்லிவிடவா' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யாவிற்கு ஜோடியாக கன்னட திரைப்பட நடிகரான சந்திரன் குமார் இணைந்துள்ளார். இவர்களுடன் இயக்குநர் கே.விஸ்வநாத், மனோபாலா, சதீஷ், யோகி பாபு, ப்ளாக் பாண்டி, போண்டா மணி, சுஹாஷினி மணிரத்னம், பிரகாஷ்ராஜ், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆக்சன் கிங் அர்ஜுனுக்கு சொந்தமான ஸ்ரீ ராம் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அர்ஜுன் தயாரித்து வரும் இந்த படத்தில் ஜெஸ்ஸி கிஃப்ட் இசையமைத்துள்ளார். மேலும் ஹெச்சி வேணுகோபால் ஒளிப்பதிவு பணியை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தினை கன்னடத்தில் 'பிரேம பரஹா' என்ற தலைப்பில் வெளியிட உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு இயக்குனர்  ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட இந்த படத்தின் டீசரை தொடர்ந்து தமிழ், கன்னடத்தில் வெளிவந்த  இசை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்னதாக வெளிவந்த ட்ரைலரை தொடர்ந்து நடிகர் அர்ஜுன் பிரேம பரஹா படத்திற்கு தணிக்கை வாரியம் யு சான்றிதழ் அளித்துள்ளதாக தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் இடம்பெறும் 'பாண் பனாரஸ்' லிரிக்கல் வீடியோ ஒன்றை இன்று மாலை 5 மணிக்கு நடிகர் ஜெயம் ரவி வெளியிடுவதாக அர்ஜுன் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவி வெளியிடும் பாண் பனாரஸ் லிரிக்கல் வீடியோ