Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நடிகர் அசோக் செல்வனின் ரெட்ரம் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஜெயம்ரவி

அசோக் செல்வனின் ரெட்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார்.

வளர்ந்து வரும் நடிகரான அசோக் செல்வன் நடிப்பில் இறுதியாக ஆன்லைனில் 'சம்டைம்ஸ் (Sometimes)' படம் வெளியானது. இந்த படத்திற்கு பிறகு அசோக் செல்வன் ஆக்சிஜன், ஜாக், நெஞ்சமெல்லாம் காதல் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்திலும் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'ரெட்ரம் (REDRUM)' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

அசோக் செல்வன் நாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் நாயகியாக கன்னட நடிகை சம்யுக்தா ஹோர்னட் நடித்து வருகிறார். இந்த படத்தினை டைம்லைன் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுந்தர் என்பவர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார். பொதுவாக தமிழ் சினிமாவில் படத்தின் கதைகள் வித்தியாசமாக இருக்கும்.

ஆனால் இந்த படத்தின் டைட்டிலையே வித்தியாசமாக வைத்துள்ளனர். இந்த டைட்டிலில் 'MURDER' என்ற வார்த்தையை தெரிவித்துள்ளனர். இதனால் இந்த படம் திகில் த்ரில்லரை மையமாக வைத்து உருவாகி வருவதாக தெரிகிறது. இந்த படத்திற்கு ரங்கூன், ஜில் ஜங் ஜக், குற்றம் 23 போன்ற படங்களின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்து வருகிறார்.

நடிகர் அசோக் செல்வனின் ரெட்ரம் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஜெயம்ரவி