Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

காலா படத்தின் டப்பிங் பணிகளை ஆரம்பித்த பா ரஞ்சித்

kaala movie dubbing

இயக்குனர்  பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவரவுள்ள படம் 'காலா'. இந்த படத்தில் ஹுமா குரேஷி, அஞ்சலி பாட்டில், சமுத்திர கனி, சுகன்யா, ஈஸ்வரி ராவ், சம்பத் ராஜ், ரவி காலே உள்பட பலர் நடித்துள்ளனர். வொண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் தனுஷ் தயாரித்து வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாகவே வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு மனைவியாக ஈஸ்வரி நடித்துள்ளார்.

 நடிகர் நானா படேகர் அரசியல்வாதியாகவும் சமுத்திரக்கனி வந்த் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இதனை அடுத்து ரஜினிகாந்த் பிறந்த நாளில் படத்தின் புது போஸ்டரை வெளியிட்டனர். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் படத்தின் டப்பிங் பணிகளை சென்னையில் உள்ள நாக் ஸ்டுடியோசில் ஆரம்பித்து அதற்கான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

காலா படத்தின் டப்பிங் பணிகளை ஆரம்பித்த பா ரஞ்சித்