Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

முன்பதிவில் எதிர்பார்த்ததை விட குறைவான வசூலை பெற்ற காலா படத்தின் டிக்கெட் வசூல்

நாளை உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட் திரையரங்குகளில் வெளியாகவுல் காலா படத்திற்கு எதிர்பார்த்ததை விட டிக்கெட் வசூல் குறைவானதாகவே இருந்து வருகிறது.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் தற்போது வரை 164 படங்களில் நடித்துள்ளார். 67 வயதை கடந்தாலும் தற்போதும் இவருடைய படங்களுக்கு உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகரான இவர் தற்போது சினிமா, அரசியல் இரண்டு துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

உலகம் முழுவதும் பிரபலமானவர் என்பதால் இவருடைய படங்கள் மொக்கையாக இருந்தாலும் நல்ல வசூலை குவித்து வரும். அந்த வகையில் இவருடைய படங்கள் வெளிவரும் போது தியேட்டர் உரிமையாளர்களுக்கும் உற்சாகம் தான். தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வாரக்கணக்கில் தியேட்டர்கள் முழுவதும் நிரம்பியே காணப்படும். தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காலா' படம் இன்று வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலரை தொடர்ந்து இந்த படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். இன்று வெளியாகவுள்ள இந்த படம் உலகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஒளிபரப்பாகிறது. இதனால் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே ஆன்லைன் டிக்கெட் விற்பனையை தொடங்கி விட்டனர். ஆனால் இதுவரை ரஜினிகாந்த படங்களுக்கு இல்லாத அளவிற்கு குறைவான வசூல் மட்டுமே கிடைத்துள்ளது.

தியேட்டரில் கவுண்டரில் கொடுக்கப்படும் டிக்கெட் விற்பனையும் குறைவான விற்பனையே சந்தித்துள்ளது. உலகம் முழுவதும் வெளியாகவுள்ள ரஜினியின் காலா படத்திற்கு குறைவான வசூல் மட்டுமே கிடைத்துள்ளதால் இது குறித்து திரையரங்கு உரிமையாளரிடமும், பொதுமக்களிடமும் விசாரிக்கையில் அவர்கள் நான்கு முக்கிய காரணங்களை முன்வைக்கின்றனர்.

1. தமிழ் சினிமாவில் நடுத்தர மக்களை இலக்காக கொண்டுதான் ஒரு படத்தை தயாரித்து வெளியிடுகின்றனர். மாதம் 10000 ரூபாய் சம்பளம் வாங்கி வாழ்க்கை நடத்தும் நடுத்தர மக்களுக்கு, தற்போது குடும்பத்துடன் படம் பார்க்க ஆகும் செலவு 1500ஐ தாண்டி விடுகிறது. 5 பேர் கொண்ட குடும்பத்தில் தலைக்கு 200ரூபாய் என்றாலும் டிக்கெட் கட்டணம் மற்றும் திரையரங்கின் உள்ளே ஸ்நேக்ஸ் போன்றவை எல்லாம் சேர்த்து 1500க்கும் அதிகமாக உள்ளது. இதனால் அதிக மக்கள் தொகையினை கொண்ட நடுத்தர மக்கள் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதை புறக்கணிப்பதால் இந்த படத்திற்கும் வசூல் குறைவானதாகவே கிடைத்துள்ளது.

2. இது தவிர தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தாலும் இன்றைய சூழலில் பழைய கதையை பார்த்து பார்த்து மக்களுக்கு போரடித்து விட்டது. மற்ற தமிழ் படங்களை போலவே ஒரு தலைவனாய் மக்களுக்கு நல்லது செய்வது, நல்லது செய்ய வரும் தலைவனை வில்லன் தடுப்பது, இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் சண்டைகள் இதையெல்லாம் பார்த்து பார்த்து மக்கள் சலித்து போய் விட்டனர். தற்போது வெளியாகவுள்ள காலா படத்திலும் ஒரு அரசியல்வாதி வில்லன், தனது குப்பத்து மக்களுக்கு நல்லது செய்ய விரும்பும் தலைவன், அதனை எதிர்க்கும் அரசியல்வாதி இப்படி ஒரே கதையே திரும்ப திரும்ப பார்க்க மக்கள் விரும்பவில்லை. ஏற்கனவே இதுபோன்ற பட வரிசையில் வெளியான கமல்ஹாசனின் நாயகன், விஜயின் தலைவா போன்று இன்னும் நிறைய படங்கள் பார்த்து பழக்கப்பட்டவை.

3. தற்போது ரஜினிகாந்த் சினிமா, அரசியல் இரண்டு துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அது தான் தற்போது அவருக்கு பிரச்சனையாக உள்ளது. இந்த சூழலில் மக்களுக்கு நல்லது செய்ய எந்த செயலை செய்தாலும் காலா ப்ரோமோஷனுக்காகவா அல்லது அரசியல் காரணமாகவா என்ற கேள்வி எழுகிறது. இன்று வெளியாக உள்ள காலா படம் தற்போது அவரது சொந்த ஊரான கர்நாடகாவில் திரையிட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

காரணம் தமிழகத்தில் வசித்து வரும், தமிழகத்தில் அரசியல்வாதியாக ஆகவுள்ள அவர், தமிழகத்திற்கு ஆதரவாக சொந்த ஊரான கர்நாடகாவை காவிரி விவகாரத்தில் எதிர்கொண்டது. ஆனால் தமிழகத்தில் காலா படத்திற்கு ஏன் இவ்வளவு குறைவான வசூல் என்றால், தமிழகத்தில் தற்போது போராட்ட களமாகவும், ரத்த களமாகவும் தான் உள்ளது. இப்படி இருக்கும் போது அவர் தனது பெயருக்கு நெருக்கடி ஏற்படும் போது மட்டும் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். பிரபலங்கள் செய்யும் ஒரே மாதிரியான செயலை ரஜினியும் செய்வது மக்களுக்கு வேதனையை அளித்துள்ளது.

4. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தினால் மக்கள், அரசாங்கம், அரசியல்வாதிகள், பிரபலங்கள் போன்றோரை வெறுத்து ஒதுக்கி விட்டனர். அதில் ரஜினிகாந்தும் ஒருவர். தன்னுடைய ஆன்மீக அரசியல் காரணத்திற்காக மக்கள் தங்களது அடிப்படை தேவைக்காக போராடும் போராட்டங்களை கவனிக்காமல் இமயமலைக்கு சென்றது. இதனால் தான் சமீபத்தில் போராட்டத்தின் போது படுகாயமடைந்த தூத்துக்குடி மக்களை ரஜினிகாந்த் காண சென்றபோது யார் நீங்க? என்ற கேள்வி எழுந்தது. இதனால் தற்போது இன்று வெளியாகவுள்ள காலா படத்தினை தமிழக மக்கள் புறக்கணித்து ரஜினிகாந்துக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் ஏராளமான மக்கள் பகிர்ந்து வருகின்றனர்.

முன்பதிவில் எதிர்பார்த்ததை விட குறைவான வசூலை பெற்ற காலா படத்தின் டிக்கெட் வசூல்