Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஜெயேந்திர சரஸ்வதி மறைவினால் நாளை வெளியாகிறது காலா டீசர்

பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று வெளியாக இருந்த காலா டீசரை ஜெயேந்திர சரஸ்வதி மறைவின் காரணமாக நாளை படக்குழு வெளியிட உள்ளது, Image Credit - Twitter (@LMKMovieManiac)

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69வது சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி நேற்று மூச்சு திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட ஏராளமான அரசியல் பிரமுகர்களும், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலன்களும் அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று மார்ச் 1-ஆம் தேதி வெளியாக இருந்த காலா டீசரை நாளை மார்ச் 2-இல் காலை 11 மணியளவில் வெளியிட உள்ளதாக நடிகர் மற்றும் காலா படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் "மரியாதைக்குரிய ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் மறைவின் காரணமாக அனைவரும் எதிர்பார்த்த காலா டீசரை நாளை வெளியிட உள்ளோம்.

காலா டீஸருக்காக ரசிகர்களாக வெகு நாட்களாக காத்திருந்தோம். இதற்காக நாங்கள் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்." என்று அவர் தெரிவித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே காலா டீசர் தள்ளிப்போனது ரசிகர்களுக்கு வேதனை அளித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடுடையவர் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் தற்போது காலா படத்தின் டீசர் ஜெயேந்திர சரஸ்வதி மறைவின் காரணமாக நாளை வெளியாகவுள்ளது. 

ஜெயேந்திர சரஸ்வதி மறைவினால் நாளை வெளியாகிறது காலா டீசர்