Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பிப்ரவரி 9ல் வெளிவர உள்ள படங்கள்

february 9th release movies

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா,ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா, மிர்ச்சி சிவா நடிப்பில் 'கலகலப்பு 2' என்ற படம் காமெடியை மையமாக வைத்து உருவாகிவருகிறது.  இப்படத்தின்  படப்பிடிப்பு  முன்னதாகவே முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், வீடியோ ப்ரோமோ போன்றவை கடந்த நாட்களில் வெளியிடபட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தினை சுந்தர் சி தனது 'அவ்னி சினி மேக்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். இந்நிலையில் படத்தினை வருகிற பிப்ரவரி மாதம் 9ம் தேதியில் வெளியிட உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய போது இயக்குனர் சுந்தர் சி அடுத்து இயக்கவிருக்கும் வரலாற்று சார்ந்த படமான 'சங்கமித்ரா' படத்தின் படப்பிடிப்பை வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தொடங்க இருப்பதாக தகவலை வெளியிட்டிருந்தார்.  

இதே நாளில் ஜீவா தற்பொழுது நடித்து வரும் 'கீ' படத்தினை வெளியிட உள்ளனர். இந்த படத்தினை புது முக இயக்குனர் காலிஸ் என்பர் இயக்கிவருகிறார். மேலும் 'குலோபல் இன்போடெய்ன்மெண்ட் ' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் இப்படத்தினை தயாரித்து வருகிறார்.இவர் நாடோடிகள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயரிப்பாளராக அறிமுகமானார். அதன் பின்னர் கோரிப்பாளையம், தென்மேற்கு பருவக்காற்று, பட்டத்து யானை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, ஈட்டி, மிருதன் போன்ற படங்களில் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.மேலும் இப்படத்தில் அபிநந்தன் ஒளிப்பதிவு பணியையும் விஷால் சந்திரசேகர் இசையமைப்பு பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நிக்கிகல்ரானி இணைந்துள்ளார். இது வரை வெளிவந்த படத்தின் போஸ்டர், டீசர், ராஜா பாட்டு மற்றும் பத்திக்குச்சு பாத்தியா ஆகிய இரு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருவதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. 

பிப்ரவரி 9ல் வெளிவர உள்ள படங்கள்