விஜய் சேதுபதியின் ஜூங்கா படத்தில் கலக்க போவது யாரு பாலா
மோகன்ராஜ் (Author) Published Date : Jun 18, 2018 12:00 ISTபொழுதுபோக்கு
நடிகர் மற்றும் தயாரிப்பாளரான விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் ரவுத்திறம், பாலகுமாரா, காஷ்மோரா போன்ற படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'ஜூங்கா'. நடிகர் விஜய் சேதுபதி, சயிஸா மற்றும் மடோனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த படத்தில் கலக்க போவது யாரு பாலாவும் நடித்துள்ளார். இந்த படம் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகம் என்று தகவல் வெளிவந்த நிலையில் இதனை சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் இயக்குனர் கோகுல் மறுத்துள்ளார்.
'இந்த படம் பாலாகுமாரா படத்தையும் தாண்டி பிரமாண்ட படமாக இருக்கும்' என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டை தொடர்ந்து இந்த படத்தின் லிரிக்கல் விடியோவை படக்குழு வெளியீட்டு வருகிறது. இதன்படி தற்போது வெளியாகியுள்ள 'லோரிக்கிறயா' என்ற லிரிக்கல் வீடியோவில் கலக்க போவது யாரு பாலா நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் ஏராளமானோர் தங்களது திறமையினால் பிரபலமடைந்து தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது பாலாவும் இணைந்துள்ளார். தன்னுடைய அசாத்தியமான நடிப்பு திறமையால் புகழ்பெற்ற இவருக்கு விஜய் சேதுபதியின் ஜூங்கா படத்தில் நடனம் ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் விஜய் சேதுபதி ப்ரொடக்சன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். இவருடைய இசையமைப்பில் தற்போது வெளியாகியுள்ள ஜூங்கா படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.