Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சீயான் விக்ரமுக்கு ஜோடியாகும் கமல் ஹாசன் மகள்

தூங்காவனம் இயக்குனரின் புதுப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அக்ஷரா ஹாசன் நடிக்க உள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘தூங்காவனம்’. இந்த படத்தை இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கியிருந்தார். இதனை தொடர்ந்து இவர் சீயான் விக்ரமை வைத்து புதுப்படத்தை இயக்க உள்ளார். இந்த புதிய படத்தில் விக்ரம் ஜோடியாக கமல் மகள் அக்சராஹாசன் நடிக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க கிரைம் மற்றும் திரில்லர் களமாக உருவாக இருக்கிறது.

இப்படத்துக்கான முழு கதை வடிவமைப்பும் தற்போது முடிந்துள்ளது. மலேசியாவில் இந்த படத்தின் படப்பிடிப்பு இடங்களுக்கான தேர்வு நடந்து வருகிறது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அக்ஷரா ஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் நித்தினிடம் பேச்சுவார்த்தை நடந்தது.

கால்ஷீட் தேதி பிரச்சினை யால் அவர் நடிக்கவில்லை. திரைத்துறையினர் நடத்திவரும் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததும் இப்படத்தின் முதல்கட்ட வேலைகள் தொடங்க உள்ளன. இதைத் தொடர்ந்து, புதிதாக ஒரு வெப் சீரீஸ் படத்திலும் அக்சரா நடிக்க உள்ளார்.

சீயான் விக்ரமுக்கு ஜோடியாகும் கமல் ஹாசன் மகள்