Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கார்த்தியின் 17வது படமான தேவ் வெளியீடு தேதி அறிவிப்பு

கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றிக்கு பிறகு புது முக இயக்குனரான ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இந்த படத்தின் வெளியீடு தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் 'கடைக்குட்டி சிங்கம்'. தீரன் படத்தின் வெற்றிக்கு பிறகு வெளியாகியுள்ள இந்த படமும் ரசிகர்கள் முக்கியமாக விவசாயிகளிடம் நல்ல மதிப்பினை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு பிறகு கார்த்தி புது முக இயக்குனரான ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். இந்த படத்திற்கு 'தேவ்' என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிட வில்லை. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் வெளியீடு தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வரும் டிசம்பர் 21ஆம் தேதியில் வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்படுகிறது.

முன்னதாக கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் கடைக்குட்டி சிங்கம் இரண்டு படங்களுமே நல்ல மதிப்பையும், வசூலையும் பெற்று தந்துள்ளது. இந்த படங்களுக்கு பிறகு அடுத்ததாக பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் கார்த்தியின் 17வது படம் வெளியாக உள்ளது. இந்த படமும் வெற்றிபெற ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த படம் கார்த்தியின் சிறுத்தை படத்தை போன்று ஆக்சன் கலந்த அதிரடி படமாக உருவாகி வருகிறது.

கார்த்தியின் 17வது படமான தேவ் வெளியீடு தேதி அறிவிப்பு