Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கார்த்திக் நரேன் பிறந்த நாளில் நரகாசூரன் ட்ரைலர் வெளியீடு தேதி அறிவிப்பு

இயக்குனர் கார்த்திக் நரேனின் பிறந்த நாளான இன்று அவரின் இரண்டாவது படமான நரகாசூரன் படத்தின் ட்ரைலர் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய முதல் படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த இளம் இயக்குனர் கார்த்திக் நரேனின் பிறந்த நாளில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். துருவங்கள் பதினாறு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நீண்ட காலங்களாக உருவாகி வரும் படம் 'நரகாசூரன்'.

அரவிந் சாமி, ஷ்ரேயா, இந்திரஜித், சுதீப் கிஷன், ஆத்மீகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தயாரிப்பாளர் பிரச்சனையால் தாமதமாகி கொண்ட வந்த இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு தேதி இயக்குனர் கார்த்திக் நரேனின் பிறந்த நாளான இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி இந்த படத்தின் ட்ரைலர் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதியில் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவுதம் மேனனின் ஒன்றாக மற்றும் ஷ்ரத்தா என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு மாயா, சிகை போன்ற படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ரான் ஏதன் யோகன் என்பவர் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் நரேன் தனது மூன்றாவது படமான 'நாடக மேடை' படத்தின் பணிகளை துவங்கவுள்ளார்.

கார்த்திக் நரேன் பிறந்த நாளில் நரகாசூரன் ட்ரைலர் வெளியீடு தேதி அறிவிப்பு