லண்டன் மியூசியத்தில் கட்டப்பாவுக்கு கிடைத்த கவுரவம்
வேலுசாமி (Author) Published Date : Mar 12, 2018 14:04 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் கடந்த 2015-2017இல் வெளியான படம் பாகுபலி, பாகுபலி 2. இந்த படத்திற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு கிடைத்திருந்தது. இந்த படத்தில் 'கட்டப்பா' என்ற கதாபாத்திரத்தில் மன்னருக்கு விசுவாசியாக நடிகர் சத்யராஜ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.
இதனை கவுரவப்படுத்தும் விதமாக தற்போது லண்டனில் உள்ள துஸ்லாத் மியூசியத்தில் சத்யராஜின் கட்டப்பா கதாபாத்திரத்தின் மெழுகு சிலையை வைத்துள்ளது. இதற்கு முன்னதாக பிரபாஸின் பாகுபலி கதாபாத்திரத்திற்கு மெழுகு சிலை வைக்கப்பட்டது. லண்டனில் மெழுகு சிலையில் தமிழ் நடிகர் ஒருவரின் சிலை இடம் பெறுவது இதுவே முதன் முறையாகும்.
தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா வொர்க்ஸ் தயாரித்திருந்த 'பாகுபலி' இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக வெளிவந்த இந்த படம் உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது. இந்த படத்தில் பிரபாஸ், ராணா, அனுஸ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் ஆகியோர் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்த படம் நடிகர் சத்யராஜின் வாழ்க்கையில் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. இதனை தொடர்ந்து நடிகர் சத்யராஜ் நடிப்பில் அடுத்ததாக பார்ட்டி, எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், மடை திறந்து போன்ற படங்கள் வெளியாகவுள்ளது.