Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கீ படத்தின் பாடலை வெளியிடும் கவுதம் மேனன்

kee movie single track

 நடிகர் ஜீவா நடிப்பில் புதுமுக இயக்குனர் காலிஸ் இயக்கத்தில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் படம் 'கீ'. இந்த படத்தில் ஜீவா,நிக்கி கல்ராணி, அனைகா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை மைக்கல் ராயப்பன் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு அனீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டார். இந்நிலையில் இந்த படத்தின் சிங்கிள் ட்ரேக் பாடலை இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட உள்ளார். இந்த படத்தில் இடம்பெறும் 'ராஜா பாட்டு..' என்று தொடங்கும் பாடலை இயக்குனர் கவுதம் மேனன் நாளை நவம்பர் 28-இல் இரவு 7:45 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

கீ படத்தின் பாடலை வெளியிடும் கவுதம் மேனன்