Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சுந்தரபாண்டியன் 2வில் சசிகுமாருக்கு ஜோடியாக இணைந்த கீர்த்தி சுரேஷ்

நடிகர் சசிகுமார் மீண்டும் இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரனுடன் இணைந்து கொம்பு வச்ச சிங்கம் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார்.

நடிகர் மற்றும் இயக்குனரான சசிகுமார், இயக்குனர் மருதுபாண்டியனின் 'அசுரவதம்' படத்திற்கு பிறகு நாடோடிகள் 2 மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களில் நடித்துள்ளார். இதில் கவுதம் மேனனின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் தனுசுக்கு இணையான நாயகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகி வரும் 'நாடோடிகள் 2' படத்தில் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

இந்த படங்களுக்கு பிறகு சசிகுமார் மீண்டும் இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரனுடன் இணைய உள்ளார். இவர் முன்னதாக 'சுந்தரபாண்டியன்' படத்தை இயக்கியவர். இவருடைய இயக்கத்தில் சசிகுமார் மீண்டும் இணைந்துள்ள இந்த படம் 'சுந்தரபாண்டியன்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக உள்ளது. இந்த படத்திற்கு 'கொம்பு வச்ச சிங்கம்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பினை அடுத்த மாதம் துவங்கவுள்ளனர். காரைக்குடி, பொள்ளாச்சி போன்ற இடங்களில் கிராமத்து பின்னணியில் கலக்கலாக உருவாக உள்ளது. விஜய், விக்ரம், தனுஷ், சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ் தற்போது சசிகுமாருடன் இணைந்துள்ளார். சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கம் படத்திற்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ள 'மாநாடு' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இணைந்துள்ளாகவும் கூறப்படுகிறது.

சுந்தரபாண்டியன் 2வில் சசிகுமாருக்கு ஜோடியாக இணைந்த கீர்த்தி சுரேஷ்