Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்துள்ள கீர்த்தி சுரேஷ்

இயக்குனர் பொன்ராம் சிவகார்த்திகேயன் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி வரும் சீம ராஜா படத்தில் கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். இது குறித்த அறிவிப்பை 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது சீம ராஜா படம் இயக்குனர் பொன் ராம் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் வரிசையில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேசுக்கு பதிலாக நடிகை சமந்தா நடித்து வருகிறார். வேலைக்காரன் படத்தை தொடர்ந்து இந்த படத்தையும் 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் நெப்போலியன், சூரி, சிம்ரன், யோகி பாபு, மனோபாலா, சதிஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்பா, அம்மா கதாபாத்திரத்தில் நெப்போலியன், சிம்ரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். நடிகர் சூரி, சதிஷ் ஆகியோர் சிவகார்த்திகேயனுக்கு நண்பனாக நடித்து வரும் நிலையில் அவரது நெருங்கிய நண்பராக புதுமுகமான அபூபக்கர் என்பவரை படக்குழு அறிமுகப்படுத்த உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களுக்கு பிறகு மீண்டும் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் இணைந்துள்ளதாக 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயனுடன் நான்காவது முறையாக இணைந்து நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் இணைந்துள்ள இந்த படம் இந்த ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் வெளிவர உள்ளது.

மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்துள்ள கீர்த்தி சுரேஷ்