பெண்களையும் குழந்தைகளையும் அனுமதிக்க மறுத்த திரையரங்குகள்
மோகன்ராஜ் (Author) Published Date : May 06, 2018 18:30 ISTபொழுதுபோக்கு
கௌதம் கார்த்திக் நடிப்பில் வெள்ளியன்று வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து, செக்ஸிற்கு ஏங்கும் பேய்யை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதை என்பதால், மிகவும் அருவெறுக்க தக்க வசனங்களுடன் படத்தில் பெரும்பாலான இடத்தில் இருக்கிறது. இரட்டை அர்த்த வசனங்கள் என்று சொல்வதை விட, நான்கு அர்த்த வசனங்கள் என்று சொல்லலாம்.
தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு சில திரையரங்குகள், கேட்டில் " பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அனுமதி இல்லை" என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். விவரம் அறியாமல் ஆன்லைனில் புக் செய்து வரும் வாடிக்கையாளர்களுக்கு, டிக்கெட்டை ரத்து செய்து பணத்தை திரும்ப கொடுக்கிறார்கள்.
ஆங்கில மொழி திரைப்படத்தில் இதுபோன்ற வசனங்கள் மற்றும் பிரபலமான ஹீரோக்களே சிலர் இதுபோன்ற திரைப்படங்களில் நடிப்பது உண்டு. தமிழ் திரைப்படங்களில் ஓரளவிற்க்கு இரட்டை அர்த்தங்கள் உள்ள வசனங்கள் இருந்தாலும் அருவெறுப்பாக இருந்ததில்லை, ஆனால் இயக்குனர் வசூலை குவிக்கலாம் என்று நினைத்து எடுத்து இருக்கிறார். எதுவும் அளவாக இருந்தால் ரசிப்பதற்கு நல்லது.
முதல் மூன்று நாட்களுக்கு தயாரிப்பாளருக்கு நல்ல வசூல் தரக்கூடிய படமாக இருந்தாலும், நல்ல கதைக்களம் இல்லாமல் வெறும் மொக்கையான காமெடி வசனங்கள் இருப்பதனால், திரையரங்கிற்கு சென்று பணத்தை செலவு செய்வது வீண்.