Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தின் தலைப்பு

jayalalitha biopic movie title

மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா, கர்நாடகா மாநிலத்தில் ஜெயராம் - வேதவல்லி ஆகியோருக்கு மகளாக பிறந்தார். இவருடைய இரண்டாவது வயதில் இவருடைய தந்தை காலமானார்.  பின்னர் சென்னைக்கு வந்த இவர் 1958-1964 இல் மெட்ரிக் படிப்பை முடித்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் புதுமுக வகுப்பில் சேரும் நேரத்தில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் தனது படிப்பை விட்டு நடிகையானார். இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய 'வெண்ணிற ஆடை' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானர்.

இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 120 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதில் மறைந்த நடிகர் எம்ஜிஆருடன் மட்டும் 28 படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர் சிவாஜி கணேசன், எஸ்எஸ் ராஜேந்திரன், முத்துராமன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் தனது திறமையை வெளிப்படுத்தி 'கலைச்செல்வி' என்ற பட்டத்தை பெற்றார். பின்னர் அரசியலில் 1981-இல் அதிமுகவில் இணைந்து கொள்கை பரப்பு செயலாளர் ஆனார்.

இதனை அடுத்து எம்ஜிஆரின் மறைவிற்கு பிறகு 1989-ஆம் ஆண்டில் அதிமுகவின் தலைமை பொறுப்பேற்று பொதுச்செயலாளர் ஆனார். பின்னர்  தமிழகத்தின் இரண்டாவது பெண் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மறைவிற்கு முன்னர் வரை ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்துள்ளார். 1991-1996 வரையிலும், 2001-இல் சில மாதங்களிலும், 2002-2006 வரையிலும், 2011-2014 வரையிலும், 2015 முதல் இறக்கும் வரையிலும் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-இல் உடல் நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை மோசமாகி டிசம்பர் 5-இல் இரவு 11:30 மணிக்கு அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்தார். இவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. தற்போது வரை இவருடைய மரணத்தில் தகுந்த ஆதாரம் கிடைக்காமல் வழக்கு நிலுவையில் உள்ளது. இவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் ஆதித்யா பரத்வாஜ் தயாரிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளனர். தற்போது இந்த படத்திற்கு 'தாய் : புரட்சி தலைவி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தின் தலைப்பு