Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நடிகை நயன்தாராவை இயக்குவது குறித்து பேசிய இயக்குனர் சர்ஜுன்

director sarjun explains his next movie with nayanthara

இயக்குனர் சர்ஜுன் கேஎம் முன்னதாக லட்சுமி, மா போன்ற குறும்படங்களை இயக்கி உள்ளார். இவர் தற்போது நடிகை நயன்தாராவை வைத்து புது படம் ஒன்றை இயக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவலை படக்குழு வெளியிட்டது. இவருடைய இயக்கத்தில் முதல் படமாக 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், வரலட்சுமி சரத்குமார், கிசோர், விவேக் ராஜ் கோபால், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். இதை தொடர்ந்து தனது இரண்டாவது படமாக நயன்தாராவை வைத்து இயக்க உள்ளார்.

இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படம் கேஜேஆர் ஸ்டுடியோஸின் மூன்றாவது படமாக உருவாக உள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் கோட்டபாடி எம் ராஜேஷ் தயாரிக்க உள்ளார். இது குறித்து இயக்குனர் சற்குணம் கேஎம் பேசுகையில் "குறும்படங்கள் என்பவை வாய்ப்பு தேடி அலையும் இயக்குனர்களுக்கு ஒரு நல்ல பாதையாக விளங்குகிறது. என்னுடைய முதல் படமான 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தின் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் என்னுடைய 'மா' குறும்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தயாரிப்பாளர் கோட்டபாடி ராஜேஷ் அவர்கள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நல்ல கதை ஏதாவது இருக்கா என்று கேட்டார். அப்போது நான் உருவாக்கி வைத்திருந்த ஒரு கதையை அவரிடம் சொன்னேன். ஆனால் இந்த கதை நயன்தாராவுக்கானது என்பது அப்போது தெரியாது. பின்னர் அவர் இந்த கதை நயன்தாராவிடம் கூற சொன்ன போது மிகவும் சந்தோஷப்பட்டேன். இந்த கதை அவருக்கும் பிடித்திருந்தது. நான் இந்த கதையை உருவாக்கிய போது இந்த கதையில் முன்னணி நட்சத்திரங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என யோசித்தேன்.

தற்போது நயன்தாரா அவர்கள் இந்த படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய 'மா' கதையை அவர் பார்த்ததாகவும், சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பாராட்டினார். நடிகை நயன்தாரா மற்றும் தயாரிப்பாளர் கோட்டபாடி ராஜேஷ் அவர்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் நிச்சயம் ஒரு சிறப்பான படத்தை உருவாக்குவேன்." என்ற அவர் தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாராவை இயக்குவது குறித்து பேசிய இயக்குனர் சர்ஜுன்