Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

'மீசைய முறுக்கு' ஆதியின் அடுத்த படம்

meesaya murukku adhi next movie

இளம் இசையமைப்பாளரான ஆதி, நான் இசையமைப்பாளராக எப்படி வந்தேன் என்பதை 'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் ஒரு இயக்குனராக தெரிவித்திருந்தார். இந்த படத்தின் வரும் காட்சிகள் அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள். இந்த படத்தை சுந்தர்.சி அவரது சொந்த நிறுவனமான அவ்னி மூவிஸ் சார்பில் தயாரித்திருந்தார். நடிகர், இசையமைப்பாளர், இயக்குனர் என்று  இந்த படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். இந்த படத்தில் ஆதி, விவேக், ஆத்மீகா, விஜயலக்ஷ்மி, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி இளைஞர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குனர் சுந்தர்.சி தற்போது 'கலகலப்பு 2' படத்தை இயக்கி வருகிறார்.  இதனை அடுத்து புதுமுக இயக்குனர் இயக்கும் படத்தை சுந்தர்.சி சொந்த நிறுவனமான அவ்னி மூவிஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஆதி கதாநாயகனாக நடிக்கிறார். மீசைய முறுக்கு கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது. ஹாக்கி விளையாட்டை மையமாக கொண்ட இந்த படத்தை அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்க இருக்கின்றனர்.   

'மீசைய முறுக்கு' ஆதியின் அடுத்த படம்