Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஒரே நாளில் நான்கு பட நிகழ்ச்சிகளை கொண்டாடிய ஸ்டுடியோ க்ரீன்

studio green celebration

தமிழ் திரையுலகில் புது படத்திற்கு எதிர்பார்ப்புகளை அதிகரிக்க பல வித நிகழ்ச்சிகளை கையாண்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் டீசர், ட்ரைலர், இசை போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து சிங்கிள் ட்ராக், வெற்றி விழா, படத்தின் டைட்டில் ரிலீஸ் போன்றவைக்கு பிரமாண்டமான முறையில் நிகழ்ச்சிகளை நடத்தி படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றனர்.        

தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களை தந்துள்ள ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் தற்பொழுது சூர்யா நடிப்பில் வெளிவந்த 'தானா சேர்ந்த கூட்டம்', ஆர்யாவின் 'கஜினிகாந்த்', கவுதம் கார்த்திக்கின் 'இருட்டு அறையில் முரட்டு குத்து', அனுஷ்காவின் அதிரடி த்ரில்லரான 'பாகமதி' போன்ற படங்களை தயாரித்து வருகிறது. இதில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் வெற்றி விழா, மற்ற படங்களின் இசை வெளியீட்டு மற்றும் சிங்கிள் ட்ராக் போன்றவை நேற்று சென்னையில் உள்ள வடபழனி நட்சத்திர ஓட்டலில் பிரமாண்டமான முறையில் வெளியிட்டனர்.         

இதில் ஆர்யாவின் 'கஜினிகாந்த்' படத்தின் சிங்கிள் பாடல், கவுதம் கார்த்திக்கின் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் சிங்கிள் பாடல், அனுஷ்காவின் அதிரடி த்ரில்லர் 'பாகமதி' படத்தின் இசை வெளியீடு போன்றவை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சூர்யா, இயக்குனர் விக்னேஷ் சிவன், அனிருத், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, கவுதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, ஆர்யா, சாயிஷா மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். ஒரே நாளில் ஒரே இடத்தில் நான்கு படங்களின் நிகழ்ச்சியை முதல் முறையாக நடத்தி கோலாகலமாக படக்குழு அனைவரும் கொண்டாடினர்.            

ஒரே நாளில் நான்கு பட நிகழ்ச்சிகளை கொண்டாடிய ஸ்டுடியோ க்ரீன்