விஷாலை மெர்குரி படத்திற்காக கேள்வி கேட்கும் திரையரங்கு உரிமையாளர்கள்
ராசு (Author) Published Date : Apr 14, 2018 14:36 ISTபொழுதுபோக்கு
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியாக இருந்த திரைப்படம் 'மெர்குரி'. நேற்று தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் அந்ததந்த மாநில மொழியில் வெளியிடப்பட்டது, வெளிநாட்டிலும் வெளியிடப்பட்டது. கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் தயாரிப்பாளர் சங்க போராட்டத்தினால், எந்த ஒரு புதிய தமிழ் திரைப்படங்களும் வெளியாகவில்லை. இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை உலகெங்கிலும் சுமார் 1000 திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், இதன் திருட்டு பதிவு நேற்று தமிழ்-ராக்கர்ஸ் இணையத்தளத்தில் தமிழ் மற்றும் அனைத்து மொழிகளிலும் வெளியிட்டனர்.
இந்த திருட்டு பதிவு தமிழ்-ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியானதை இந்த படத்தை தயாரித்தவரும் இயக்கியவரும் கவலை பட்டதாக தெரியவில்லை, ஆனால் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய முடியாமல் போனதற்கு இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வருத்தம் தெரிவித்து இருந்தார்.
ஆனால் இதற்கு நன்கு அனுபவம் வாய்ந்த மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் திரையிட்டு கொண்டிருக்கும், தமிழ்நாட்டு இளம் திரையரங்கு உரிமையாளர்கள் இப்போது தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது நாள் வரையில் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் இருந்து தான் தமிழ்-ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களுக்கு திருட்டு தனமாக பதிவு செய்ய பட்டதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்து இருந்த நிலையில், இப்பொழுது தமிழ்நாட்டில் எந்த ஒரு திரையரங்குகளிலும் மெர்குரி திரைப்படம் ரிலீஸ் ஆகவில்லை, இவ்வாறு இருக்கையில் இணையத்தில் வந்தது எப்படி? இப்போதாவது வெளிநாட்டில் வெளியாகும் பதிப்பில் இருந்துதான் திருட்டு தனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை புரிந்து கொண்டு தமிழ்நாட்டு திரையரங்கு உரிமையாளர்களை குறை கூறுவதை நிறுத்தவேண்டும் என தெரிவித்தனர். இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியிலும் மற்ற திரையரங்கு உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.