Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மோகன்லாலின் நீரழி பர்ஸ்ட் லுக் போஸ்டர்

mohanlal new movie neerali first look poster

தமிழ் மற்றும் மலையாளத்தின் முன்னணி நடிகரான மோகன்லால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'ஓடியன்'. இந்த படத்தை ஸ்ரீகுமார் மேனன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் மோகன்லால் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் 'நீரழி'. இந்த படத்தை புதுமுக இயக்குனரான அஜோய் வர்மா இயக்க உள்ளார். இந்த படத்தில் மோகன்லால் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக 'மிஸ் கர்நாடகா' மாடல் அழகி பார்வதி நாயர் நடிக்க உள்ளார்.

இதற்கான அறிவிப்பு கடந்த வருடம் அக்டோபர் மாதம் இயக்குனர் அஜய் வர்மா தெரிவித்தார். ஆனால் மோகன்லால் 'ஓடியன்' படத்தில் பிசியாக இருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமானது. சமீபத்தில் இந்த படத்தின் போட்டோ சூட் காட்சிகள் எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை,புனே, ஸ்ரீலங்கா போன்ற இடங்களில் நடக்க உள்ளது. இந்த படத்தின் இயக்குனர் அஜோய் வர்மா இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தை முன்சாட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சந்தோஷ் டி குருவிலா, ஜான் தாமஸ், மிபு ஜோஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர்.

இந்த படம் முன்சாட் நிறுவனம் 'நிமிர்' படத்திற்கு பிறகு தயாரிக்கும் இரண்டாவது படமாகும்.  இந்த படத்தில் நடிகை த்ரிஷா மற்றும் மீனா ஆகியோர் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் படக்குழு அதனை மறுத்து பார்வதி நாயர் இந்த படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஸ்டீபன் தேவசி இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் துடியில் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

மோகன்லாலின் நீரழி பர்ஸ்ட் லுக் போஸ்டர்