நவரச நாயகன் - கெளதம் கார்த்திக் இணையும் மிஸ்டர் சந்திரமௌலி படப்பிடிப்பு
யசோதா (Author) Published Date : Nov 21, 2017 18:10 ISTபொழுதுபோக்கு
தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிவப்பு மனிதன் போன்ற படங்களை இயக்கிய திரு தற்பொழுது நவரச நாயகன் கார்த்திக் அவரது மகன் கெளதம் கார்த்திக் இணைத்து 'மிஸ்டர் சந்திரமௌலி' என்ற படத்தினை இயக்கவுள்ளார். இந்த படத்தின் மூலம் முதல் முதலாக கார்த்திக் மற்றும் கெளதம் கார்த்திக் இணையப்போகிறார்கள். இந்த படம் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்போவதாகவும், சில பிரபலங்களை படத்தில் இணைக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்திருந்தது.
கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் ரெஜினா, வரலக்ஷ்மி சரத்குமார் நாயகியாக நடிக்க, இவர்களுடன் இணைந்து இயக்குனர்கள் மஹேந்திரன் - அகத்தியன், சந்தோஷ் பிரசாத், சதிஷ் போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடிக்க இருக்கின்றனர் .
விக்ரம் வேதா புகழ் சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்க, ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார் மேலும் டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இந்நிலையில் படத்தின் ஸ்க்ரிப்ட் வேலைகள் முடிவந்ததாகவும் படத்தின் படப்பிடிப்பு வருகிற 29ம் தேதி துவங்க இருப்பதாகவும் படத்தின் இயக்குனர் திரு அவரது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.