Mr Local in Tamilrockers: மிஸ்டர் லோக்கல் படம் இணையத்தில் லீக் ஆனது
விக்னேஷ் (Author) Published Date : May 17, 2019 17:56 ISTபொழுதுபோக்கு
சிவா கார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில் இன்று வெளியான மிஸ்டர் லோக்கல் நகைச்சுவை திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் திருட்டு பதிவு வெளியானது. எந்த ஒரு படங்கள் வெளியானாலும் குறிப்பிட்ட மணிநேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் படத்தின் திருட்டு பதிவை வெளியிடுகிறது.
இதனால் தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. ஒரு சில மக்கள் திரையரங்குத்திற்கு வராமல் இணையத்தில் பார்க்கின்றனர். இதனால் அனைவருக்கும் நஷ்டம் தான் ஏற்படுகிறது. இதை போலவே விமர்சகர்கள் என்ற பெயரில் தயாரிப்பாளர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு படத்திற்கு விமர்சனம் கூறுவது, தயாரிப்பாளர் பணம் தரவில்லை என்றால் நல்ல இருக்கும் படத்தை கூட கேவலமாக இருப்பதாக கூறுவது இவர்களின் வழக்கம். ஒரு சிலர் இவர்களுது விமர்சனங்களை பார்த்து திரையரங்கில் படத்தை பார்ப்பதை தவிர்க்கிறார்கள்.
இது போன்ற செயல்களால் திரைக்கு வரும் படங்கள் பெருமளவு நஷ்டம் அடைகிறது. மோசமான விமர்சனங்கள் மற்றும் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியானாலும், ஒரு சில படங்கள் இவர்களையும் தாண்டி வசூல் சாதனைகள் படைப்பதும் உண்டு. மக்கள் புரிந்து கொண்டு, திருட்டு பதிவை தவிர்த்தால் நல்லது.