Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாகும் அனிருத்

கோலமாவு கோகிலா படத்தில் சிறப்பு தோற்றத்தில் அனிருத் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

நடிகை நயன்தாரா நடிப்பில் இறுதியாக வேலைக்காரன் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா, கொலையுதிர் காலம்,  சாயிரா நரசிம்ம ரெட்டி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள கோலமாவு கோகிலா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

இதனை தொடர்ந்து இந்த படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் சிறப்பு தோற்றத்தில் அனிருத் நடித்துள்ளாராம். அதில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது உண்மையானால் 33 வயதான நயன்தாரா தன்னை விட 10 வயது சிறியவரான அனிருத்துக்கு ஜோடியாவது இதுவே முதன் முறையாகும். மேலும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அல்லிராஜா சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்லின் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் இவர் நயன்தாராவுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாகும் அனிருத்