Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

'நடிகையர் திலகம்' படத்தின் ரிலீஸ் தேதி

nadigayar thilagam movie release date

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகை சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் 'நடிகையர் திலகம்' படம் தற்போது உருவாகிவருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் தயாராகி வருகிறது. தெலுங்கில் இந்த படம் 'மகாநதி' என்ற தலைப்பிலும், தமிழில் 'நடிகையர் திலகம்' என்ற தலைப்பிலும் வெளியாக இருக்கிறது. இந்த படம் மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை சார்ந்த படமாகும். இந்த படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அவரது கணவர் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கிறார். 

இந்த படத்தில் சமந்தா மற்றும் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதில் சமந்தா பத்திரிகை நிருபர் கதாபாத்திரத்திலும், நடிகர் பிரகாஷ்ராஜ், அலுரிசக்ரபாணி என்ற கதாசிரியர் வேடத்திலும் நடிக்கின்றனர். மிக்கி ஜெ மேயர் இசையமைக்கும் இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. நடிகை சாவித்ரி பிறந்த நாள் அன்று இந்த படத்தின் தலைப்பு அடங்கிய வீடியோ ஒன்று படக்குழு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது. அதில் அடுத்த ஆண்டு மார்ச் 29-இல் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

'நடிகையர் திலகம்' படத்தின் ரிலீஸ் தேதி