Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நகுல் 'செய்' படத்தின் மோஷன் போஸ்டர்

நகுல் 'செய்' படத்தின் மோஷன் போஸ்டர்

காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தக்கோட்டை போன்ற படங்களில் நடித்த நகுல், தற்பொழுது புதுமுக இயக்குனர் ராஜ் பாபு இயக்கி வரும் 'செய்' படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். பாலிவுட் நடிகை ஏஞ்சல் நகுலுக்கு ஜோடியாக நடித்துள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், நாசர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  

துபாய் மற்றும் மும்பையில் செயல்பட்டு வரும் 'ட்ரிப்பி டர்டில் புரொட்க்‌ஷன்ஸ்' நிறுவனம் சார்பில் மன்னு என்பவர் தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படத்திற்கு, ஒளிப்பதிவாளராக விஜய் உலகநாதன் பணிபுருக்கிறார். தூங்காநகரம், சிகரம் தொடு போன்ற படங்களின் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர்களுடன் இணைந்து நிக்ஸ் லோபஸ் இசை அமைத்துள்ளார்.

படப்பிடிப்புகள் இறுதியை வந்தடைந்த நிலையில், படத்தினை வெளியிடுவதற்காக பணியில் ஈடுபட்டு வரும் படக்குழுவினர், இன்று மாலை 6 மணிக்கு படத்தின் மோஷன் போஸ்டர் வெளிவந்துள்ளது. தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களின் உரிமையையும் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வாங்கியுள்ளது.   

 

நகுல் 'செய்' படத்தின் மோஷன் போஸ்டர்