Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

யுவனின் இசையமைப்பில் உருவாகவுள்ள நகுல் சுனைனாவின் எரியும் கண்ணாடி

நடிகர் மற்றும் பாடகரான நகுல் மீண்டும் நடிகை சுனைனாவுடன் இணைந்து இயக்குனர் சச்சின் தேவ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

நடிகர் மற்றும் பாடகரான நகுல், தமிழ் சினிமாவிற்கு ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தின் மூலம் அறிமுமானார். இந்த படத்திற்கு இவருடைய நடிப்பில் வெளியான காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த படங்களுக்கு பிறகு இறுதியாக வெளியான நாரதன், பிரம்மா.காம் போன்ற படங்கள் ரசிகர்களிடம் ஓரளவிற்கு நல்ல ஆதரவு இருந்தது.

இவருடைய நடிப்பில் அடுத்ததாக 'செய்' என்ற படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இதன் பிறகு மீண்டும் நடிகை சுனைனாவுடன் இணைந்து இயக்குனர் சச்சின் தேவ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே நடிகை சுனைனாவுடன் இணைந்து காதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற படங்களில் நகுல் நடித்துள்ளார். இவர்களுடைய ஜோடிக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இதனால் இவர்களை வைத்து காதல் கலந்த ஆக்சன் படத்தை இயக்க முடிவு செய்துள்ளார் இயக்குனர் சச்சின் தேவ். இந்த படத்திற்கு 'எரியும் கண்ணாடி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதுகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பினை விரைவில் துவங்கவுள்ளனர்.

யுவனின் இசையமைப்பில் உருவாகவுள்ள நகுல் சுனைனாவின் எரியும் கண்ணாடி