Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நரகாசூரன் படத்தின் பர்ஸ்ட் லுக்

naragasooran movie first look

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் கார்த்திக் நரேன் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் மாபெரும் வெற்றி பெற்றதோடு சிறந்த இயக்குனர் என்ற விருதினையும் பெற்றார். இதனை தொடர்ந்து அதிரடி த்ரில்லரான 'நரகாசூரன்' படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தில் அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன், மலையாள நடிகர் இந்திரஜித், ஸ்ரேயா, மிசையமுறுக்கு நாயகி ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஊட்டியை மையமாக கொண்டு அதனை சுற்றி உள்ள பகுதிகளில் படப்பிடிப்புகள் எடுக்கப்பட்டது.

இயக்குனர் கவுதம் மேனன் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக்கி வரும்  இப்படத்தில் 'மாயா' புகழ் ரான் எத்தன் யோஷான் இசையமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு எடுப்பதற்கு முன்பே தயாரிப்பாளர் கவுதம் மேனன் 40 நாட்களில் இறுதி நிலையை எட்டிவிட வேண்டும் என்று நினைத்திருக்கிறார். இதன் காரணத்தினால் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் படபிடிப்பு 41வது நாட்களில் முடித்து விட்டதாக இயக்குனர் கார்த்திக் நரேன் கூறியுள்ளார்.

இந்நிலையில் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை நேற்று வெளியிட்டிருந்தனர்.  படத்தினை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடுவதினால், படக்குழுவினர் படத்தின் மற்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்  

நரகாசூரன் படத்தின் பர்ஸ்ட் லுக்