Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நாயகி சீரியல் விஜயலட்சுமி

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நாயகி சீரியல் நடிகை விஜயலட்சுமி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 67வது நாளை கடந்துள்ளது. நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், மகத் தேவையில்லாமல் மும்தாஜ் மற்றும் டேனியிடம் சண்டை போட்டு ரசிகர்களிடம் கெட்ட பெயர் வாங்கி வருகிறார். இதனால் இந்த வார ஏவிக்சனில் மகத் வெளியேற அதிகபட்ச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த வைல்ட் கார்ட் என்ட்ரி அறிமுகமாகியுள்ளது.

இந்த வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நாயகி சீரியல் பிரபலம் மற்றும் நடிகையான விஜயலட்சுமி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இவர் முன்னதாக சென்னை 28, சரோஜா, அஞ்சாதே, வெண்ணிலா வீடு, சென்னை 28 - 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இதன் பிறகு நாயகி சீரியலில் நடித்து வந்த இவர் தற்போது நாயகி சீரியலில் இருந்து சமீபத்தில் விலகி உள்ளார். இதனால் இவருக்கு பதிலாக நடிகை வித்யா பிரதீப் இவருடைய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக  சரவணன் மீனாட்சி - ரஷிதா மகாலட்சுமி மற்றும் நாயகி சீரியல் விஜயலட்சுமி ஆகியோரில் ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நுழைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இதனை உறுதி படுத்தும் விதமாக நடிகை விஜயலட்சுமி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். ஆரம்பமே அம்மக்களத்துடன் ஆடலும் பாடலுமாக வருகிறார். அப்படி தான் எல்லோரும் வந்தனர், ஆனால் பிக்பாஸின் புது புது டாஸ்கால் நொந்து நூடுல்ஸ் ஆகி மூலையில் அமர்ந்து கிடக்கின்றனர். இனி இவருடைய நிலைமை இன்னும் 30 நாட்களில் என்ன ஆக போகிறது என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நாயகி சீரியல் விஜயலட்சுமி