Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ரசிகர்களுக்கு அடுத்தடுத்து விருந்தளிக்கும் நயன்தாரா

கோலமாவு கோகிலா படத்திற்கு பிறகு நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை நயன்தாரா நடிப்பில் வேலைக்காரன் படத்திற்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 17இல் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் 'கோலமாவு கோகிலா'. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் திரையரங்கை அதிர வைத்து வருகிறது. இந்தியா முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வரும் இந்த படம் பிளாக்பஸ்டர் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துக்களை தெரிவித்து படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இந்நிலையில் நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' படத்தின் வெளியீடு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வந்த இந்த படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இயக்குனர் அஜய் ஞானமுத்து முன்னதாக 'டிமான்டி காலனி' என்ற த்ரில்லர் படத்தை இயக்கியவர். இவருடைய இயக்கத்தில் அடுத்த த்ரில்லர் ஆக்சன் படமாக 'இமைக்கா நொடிகள்' படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, அதர்வா, அனுராக் கிஷியாய், ராசி கண்ணா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இவருடைய இசையமைப்பில் முன்னதாக 'விளம்பர இடைவேளை' என்ற வீடியோ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.  சமீபத்தில் இந்த படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்த நிலையில் இந்த படத்தின் வெளியீடு தேதியினை படக்குழு அறிவித்துள்ளது.

ரசிகர்களுக்கு அடுத்தடுத்து விருந்தளிக்கும் நயன்தாரா