Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கீர்த்தி சுரேஷின் மாமியார் கதாபாத்திரத்தில் நயன்தாரா

ஆந்திர முதலமைச்சர் வரலாற்று படத்தில் மம்முட்டி, நயன்தாராவிற்கு மருமகள் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ், 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கு பிறகு நடிகையர் திலகம், சண்டக்கோழி 2, சாமி 2, தளபதி 62 போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இதில் நடிகையர் திலகம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் மே மாதம் 6-ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் பணிகளில் ஈடுபட்டுள்ள படக்குழு விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலரை வெளியிட உள்ளது.

இந்த படங்களை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ள புதுப்பட தகவல் வெளியாகியுள்ளது. இவர் மறைந்த ஆந்திர முதலமைச்சரான ஒய்எஸ்ஆர் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க உள்ளார். ஒய்எஸ்ஆர் ரெட்டியின் பையோபிக் படமான இந்த படத்தில் ஒய்எஸ்ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் மம்முட்டி நடிக்க உள்ளார். ஒய்எஸ்ஆர் ரெட்டியின் மனைவியான ஒய்எஸ் விஜயலக்ஷ்மி கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளார்.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது மம்முட்டியின் மருமகள் கதாபாத்திரத்தில் அதாவது நயன்தாராவுக்கு மருமகளாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இது உறுதியானால் இந்த படத்தின் மூலம் முன்னணி நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் முதன் முறையாக ஒன்றிணைகின்றனர்.

கீர்த்தி சுரேஷின் மாமியார் கதாபாத்திரத்தில் நயன்தாரா