Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நயன்தாராவின் கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நயன்தாராவின் கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டில் வெளியான இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த படங்களுக்கு பிறகு நயன்தாரா நடிப்பில் ஐரா, விசுவாசம், சைரா நரசிம்ம ரெட்டி, கொலையுதிர் காலம், லவ் ஆக்சன் டிராமா போன்ற பல படங்கள் உருவாகி வருகின்றது.

நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருவதால் இவருக்கு தற்போது வரையிலும் ரசிகர்களிடம் நல்ல ஆதரவு இருந்து வருகிறது. கடந்த ஞாயிற்று கிழமை இவருடைய பிறந் த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் இவருடைய நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வந்த 'கொலையுதிர் காலம்' படத்தின் ரிலீஸ் தேதியினை படக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி இந்த படம் அடுத்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் வெளியாகவுள்ளது. இந்த படத்தினை உன்னைப்போல் ஒருவன், பில்லா 2 போன்ற படங்களை இயக்கிய சக்ரி டோலெட்டி என்பவர் இயக்கியுள்ளார். த்ரில்லர் படமான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

நயன்தாராவின் கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு