Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஜீவாவின் 29வது படத்தின் புதுவித தகவல்

jiiva new movie cast

சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்து வரும் காமெடி படம் கலகலப்பு 2. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜீவாவின் அடுத்த படத்திற்கான தகவல் வந்துள்ளது. ஜீவாவின் 29 வது படத்தினை புதுமுக இயக்குனர் டான் சாண்டி இயக்குகிறார். ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரிக்கும் இப்படத்தில் 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ஷாலினி பாண்டே நாயகியாக இணைந்துள்ளார். இந்த தகவல் சில நாட்களுக்கு முன்பே வெளியானது குறிப்பிட்ட தக்கது.      

இந்நிலையில் படத்தினை பற்றி இயக்குனர் பேசுகையில், நடிகர் ஜீவாவின் 29 வது படம் காமெடி கலந்த அதிரடி திரில்லராக உருவாக்கவுள்ளது. இந்த படத்தில் இசை புயலாக வளர்ந்து வரும் 'விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார். மேலும் படத்தொகுப்பு பானையை ரூபன் மேற்கொண்டுள்ளார்.அடுத்த ஆண்டின் முதல் மாதத்தில் துவங்கவிருக்கும் இப்படத்தில் ரசிகர்கள் ஆட்சர்யப்படுத்தும் விதமாக சுவாரிஸ்யமான காட்சிகள் இடம்பெற உள்ளது. மேலும் இப்படத்தின் மற்ற நடிகர் - நடிகைகான தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.        

ஜீவாவின் 29வது படத்தின் புதுவித தகவல்