Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பிரானாவிற்காக காத்திருந்து பொறுமையே போச்சு

நடிகை நித்யா மேனனின் ஹாரர் படமான 'பிராணா' வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

'மெர்சல்' படத்திற்கு பிறகு நடிகை நித்யா மேனன் தமிழில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான 'தி அயன் லேடி' படத்திலும், இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் 'சைக்கோ' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதற்கு முன்பு இவருடைய நடிப்பில் 'பிராணா' என்ற த்ரில்லர் படம் உருவாகி வந்தது. இந்த படம் முழுவதும் நடிகை நித்யா மேனன் ஒருவர் மட்டுமே நடித்துள்ளார். 

இந்த படத்தினை பிரபல மலையாள இயக்குனரான விகே பிரகாஷ் இயக்கியுள்ளார். இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற நான்கு மொழிகளில் உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால் எதிர்பாராத காரணங்களால் இந்த படத்தின் வெளியீடு தொடர்ந்து தாமதமாகி கொண்டே வந்தது. தற்போது தான் இந்த படத்தின் வெளியீடு குறித்த தகவலை போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது.

இது குறித்து நித்யா மேனன் தனது டிவிட்டரில் "பிராணா படம் நான்கு மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்காக நீண்ட காலங்களாக காத்திருந்தேன். காத்திருந்து காத்திருந்து பொறுமையை இழந்து விட்டேன்" என்று தெரிவித்து இந்த படத்தின் போஸ்டர்களை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த படம் சினிமா துறையில் புதுவித முயற்சியாக ஒரு கதாபாத்திரத்தை வைத்து திகில் கலந்த ஹாரர் படமாக உருவாகியுள்ளது. 

பிரானாவிற்காக காத்திருந்து பொறுமையே போச்சு