Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

அவெஞ்சர்ஸ் நடிகர்கள் தேர்வில் கலந்து கொள்ளும் நிவேதா பெத்துராஜ்

ஒரு நாள் கூத்து படம் மூலம் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ், இவர் தற்போது சூப்பர் ஹீரோஸ் படமான அவெஞ்சர்ஸ் ஆடிஷனில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கேப்டன் அமேரிக்கா வின்டர் சோல்ஜர் மற்றும் கேப்டன் அமேரிக்கா சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வசூல் சாதனையை படைத்து வரும் படம் 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்'. இந்த படம் தற்போது வரையிலும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. இந்த படத்தில் 25 சூப்பர் வீரர்கள் ஒன்றிணைந்து வில்லனான தனோசை எதிர்க்கும் விதமாக இருந்தது.

ஆனால் படத்தின் க்ளைமேக்சில் 25 வீரர்களில் ஸ்பைடர் மென், டி சாலா, வின்டர் சோல்ஜர், டாக்டர் ஸ்ட்ரேஞ்  போன்ற 10க்கும் மேற்பட்ட வீரர்கள் தனோஸால் அழிந்து விட்டனர். மீதமுள்ள வீரர்களை வைத்து அடுத்த அவெஞ்சர்ஸ் பாகத்தில் தனோசை எதிர்க்க உள்ளனர். 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் 2' படத்தின் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த படத்திற்கான நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆவலுடன் நடிக்க உள்ளதாகவும் நடைபெற்று வரும் அவெஞ்சர்ஸ் ஆடிஷனில் கலந்து கொள்ள உள்ளதாகவும் நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமான இவர், உதயநிதி ஸ்டாலினுடன் பொதுவாக எம்மனசு தங்கம் படத்திலும் தெலுங்கில் மெண்டல் மாதிலோ படத்திலும் நடித்துள்ளார். இவரது நடிப்பில் அடுத்ததாக பார்ட்டி, டிக் டிக் டிக், ஜகஜால கில்லாடி, திமிரு புடிச்சவன் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. தற்போதைய சூழலுக்கேற்ப திரைத்துறையில் கவர்ச்சியை கையாண்டு வருவதால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் ஹாலிவுட் படங்களிலும் நடிக்க ஆசை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

அவெஞ்சர்ஸ் நடிகர்கள் தேர்வில் கலந்து கொள்ளும் நிவேதா பெத்துராஜ்