Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ரவுடி கெட்டப்பில் நிவின் பாலி - ரிச்சி

richie movie stills

புதுமுக இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கிய 'ரிச்சி' படத்தில் நிவின் பாலி ரவுடி கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் பஸ்ட் லுக், ட்ரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. படத்தின் படப்பிடிப்புகள் முன்பே முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை விறுவிறுப்பாக ஆரமித்த படக்குழுவினர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளர்.    

'காஸ்ட் என் கிரேவ்' நிறுவனம் தயாரித்த இப்படத்தில் நாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கிறார்  மேலும் லட்சுமி பிரியா, ஜிகே ரெட்டி, அஷ்வின் குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு இவர்களுடன் இணைந்து நடராஜன் சுப்ரமணியன், அசோக் செல்வன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  

படத்தின் வெளியீட்டு வேலைகளும் நடைபெற்று இருக்கும் இந்நிலையில் படக்குழுவினர் டிசம்பர் 8-ஆம் தேதி வெளியிடுவதாக அதிகார பூர்வ அறிவிப்பினை தெரிவித்துள்ளனர். மேலும் விக்ரம் வேதா, அவள், அறம் போன்ற தொடர் வெற்றி படத்தினை வெளியிட்ட ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் ரிச்சி படத்தினையும் வெளியிட உள்ளது.     

ரவுடி கெட்டப்பில் நிவின் பாலி - ரிச்சி