Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

வரலாற்றில் முதன் முறையாக இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டில் ஒரு தமிழ் படங்கள் கூட ரிலீஸ் ஆகவில்லை

தமிழ் புத்தாண்டில் ரசிகர்களுக்கு ஒரு தமிழ் படங்கள் கூட வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு நம் தமிழக மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதிய ஆண்டு பிறப்பதை கொண்டாடும் இந்நாளை இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட தமிழர்கள் வாழக்கூடிய வெளிநாடுகளிலும் விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை புத்தாண்டு என்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையில் ரசிகர்கள் தியேட்டரில் படங்களை கண்டுகளிக்க ஆர்வமுடன் இருந்தனர்.

ஆனால் தற்போது தமிழ் திரைத்துறையில் நிலவி தயாரிப்பாளர் பிரச்சனை காரணமாக ஒரு படங்கள் கூட வெளியாகவில்லை. இது தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் அளிக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாகும். தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் சேவை நிறுவனங்களை எதிர்த்து கடந்த மார்ச் மாதம் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். டிஜிட்டல் சேவை கட்டணத்தை குறைப்பது மற்றும் தியேட்டரில் வசூலிக்கப்படும் டிக்கெட் கட்டணத்தை கணினி மையமாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டது. இது குறித்து பல முறை தியேட்டர் உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட நிலையில் அது தோல்வியில் முடிந்தது.

இதனால் தற்போது தயாரிப்பாளர் சங்கம் புதிய இரண்டு டிஜிட்டல் சேவை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. வட இந்தியாவில் 1050 திரையரங்குகளுக்கு டிஜிட்டல் சேவை அளித்து வரும் கே செரா செரா (K  Sera Sera) மற்றும் ஏரோக்ஸ் (Aerox) போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் ஏரோக்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் சங்க ஒப்பந்தப்படி மற்ற டிஜிட்டல் நிறுவனங்களை விட 50 சதவீத குறைவான கட்டணத்தை பெற்று கொள்ள இருக்கிறது.

இதனால் தயாரிப்பாளர் சங்கமே இந்த மாஸ்டரிங் பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதற்காக ஒவ்வொரு தியேட்டர் உரிமையாளர்களை சந்தித்து தற்போதுள்ள சூழல் குறித்து தயாரிப்பாளர் சங்கம் விவாதிக்க உள்ளது. இதற்கான கலந்துரையாடல் இன்று நடந்து வருகிறது. தற்போது நிகழ்ந்து வரும் தயாரிப்பாளர் வேலை நிறுத்தத்தால் பல நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்த போராட்டம் காரணமாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெளியாகவிருந்த பல படங்கள் வெளியாகாமல் உள்ளது.

தற்போது வழக்கமாகவே திரைப்படங்கள் வெளியாகும் போது திரையரங்குகள் கிடைக்காமல் புது படங்கள் வெளியேறுகிறது. இந்நிலையில் இந்த போராட்டம் காரணமாக ஒட்டு மொத்த படங்களும் வெளியானால் தியேட்டரில் ஒரே காட்சி மட்டுமே புது படங்கள் திரையிடப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தயாரிப்பாளர் சங்கம் புதிய நிறுவனங்களுடன் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் தயாரிப்பாளர்கள் லாபம் ஈட்டுவதற்காக மட்டுமே இத்தகைய முடிவை எடுத்துள்ளனர். தயாரிப்பாளர்களின் இந்த முடிவினால் அனைத்து தியேட்டர் உரிமையாளர்களும் பாதிப்படைகின்றனர். ஏற்கனவே கியூப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதால் புதிய நிறுவனங்களுக்கு உடனடியாக திரையரங்கு உரிமையாளர்கள் செல்ல முடியாது. ஒப்பந்தம் முடிவடையும் தியேட்டர் உரிமையாளர்கள் மட்டுமே இந்த புதிய நிறுவனங்களின் டிஜிட்டல் சேவைகளை அணுக முடியும், ஆனால் இதில் சிலர் மட்டுமே உள்ளனர்.

வரலாற்றில் முதன் முறையாக இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டில் ஒரு தமிழ் படங்கள் கூட ரிலீஸ் ஆகவில்லை