Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பின்னணிப் பாடகி பி.சுசீலா பிக்பாஸ் ஜுலியின் புதிய படத்தில் இசையமைக்கிறார்

பின்னணிப் பாடகி பி.சுசீலா பிக்பாஸ் ஜுலியின் புதிய படத்தில் இசையமைக்கிறார் Imagecredit : Twitter @UrsTrulyNaniii @lianajohn28

பழம்பெரும் பின்னணி பாடகியான பி.சுசீலா இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். ஆந்திர மாநிலம் விஜயநகரத்தைச் சேர்ந்த  இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 25,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 

2008-ம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கிச் சிறப்பித்தது. மேலும் இவர் 5 முறை தேசிய விருது பெற்ற பின்னணி பாடகி  என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். அதிகமான பாடல்களைப் பாடியதால் இவர்  கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்துறையில் அனுபவம் உள்ள இவர் தற்போது ஒரு தமிழ் திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

நாடு முழுவதும் அரசு கொண்டுவந்த நீட் தேர்வால் மருத்துவப் படிப்பு படிக்க இயலாமல் போன அரியலுரைச் சேர்ந்த +2 மாணவி அனிதாவின் கதையை மையமாக வைத்து டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ் என்ற தமிழ் படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ஆர்.ஜே.பிக்ச்சர்ஸ் மற்றும் ரன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கின்றன. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பெயர் வாங்கி விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த ஜூலி இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாக உள்ளார்.

எஸ்.அஜய் இயக்கும் இப்படத்தின் கதை பி.சுசீலா அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னணிப் பாடகி பி.சுசீலா பிக்பாஸ் ஜுலியின் புதிய படத்தில் இசையமைக்கிறார்